தேசியம்
செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு Conservative வேட்பாளர்!

Conservative கட்சி மற்றொரு வேட்பாளர்களை தேர்தலில் இருந்து நீக்கியுள்ளது.
Quebec மாகாண Berthier-Maskinonge தொகுதியின் Conservative கட்சி வேட்பாளர் Simon Payette தேர்தலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இவருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்ட Liberal கட்சி வேட்பாளர் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்காக இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை வெள்ளிக்கிழமை (04) கட்சி உறுதிப்படுத்தியது.
இவர் இம்முறை Conservative கட்சி தகுதி நீக்கம் செய்த ஐந்தாவது வேட்பாளராவார்.
ஏற்கனவே Conservative கட்சியின் Windsor-Tecumseh-Lakeshore தொகுதி வேட்பாளர் Mark McKenzie, Montréal Laurier-Sainte-Marie தொகுதி வேட்பாளர் Stefan Marquis, New Westminster-Burnaby-Maillardville தொகுதியில் வேட்பாளர் Lourence Singh Etobicoke வடக்கு தொகுதி வேட்பாளர் Don Patel ஆகியோர் தேர்தலில் இருந்து விலக்கப்பட்டனர்.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு திங்கட்கிழமையுடன் (07) முடிவடைகிறது.
பொதுத் தேர்தல் வாக்களிப்பு April 28 ஆம் திகதி நடைபெறுகிறது.

Related posts

Atlantic கனடாவில் வலுவான உள்கட்டமைப்பின் தேவையை வலியுறுத்திய பிரதமர்

Lankathas Pathmanathan

Royal Military கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் முப்படைகளின் பயிற்சி பெறும் நான்கு மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan

அதிகரித்து வரும் தொற்றால் அழுத்தத்தை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment