பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் 12-வது நாளில் கருத்து கணிப்பில் மத்திய Liberal கட்சி, Conservative கட்சியை விட ஒன்பது புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.
April 2 ஆம் திகதியுடன் முடிவடைந்த Nanos Research கருத்து கணிப்பில், Mark Carney தலைமையிலான Liberal கட்சி 46 சதவீதமாகவும், Pierre Poilievre Conservative கட்சி 37 சதவீதமாகவும் உள்ளது.
புதிய ஜனநாயகக் கட்சி 9 சதவீதத்துடன், Bloc Quebecois 6 சதவீதத்துடன், பசுமைக் கட்சி 2 சதவீதத்துடன், கனடா மக்கள் கட்சி 1 சதவீதத்துடன் உள்ளன.
தரவு சேகரிப்பின் ஆரம்ப ஐந்து நாட்களில், Liberal குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளது.
அவர்களுக்கான ஆதரவு 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், முன்னர் கனடாவின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக இருந்த NDP-க்கான ஆதரவு வீழ்ச்சி அடைந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவை குறிப்பதாக Nanos Research தலைமை தரவு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.