தேசியம்
செய்திகள்

நான்காவது Conservative வேட்பாளர் தகுதி நீக்கம்!

இரண்டு நாட்களில் நான்காவது வேட்பாளரை Conservative கட்சி தகுதி நீக்கம் செய்துள்ளது.
Etobicoke வடக்கு தொகுதியின் வேட்பாளர் Don Patel தமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த போட்டியிட மாட்டார் என்பதை Conservative கட்சி புதன்கிழமை (02) உறுதிப்படுத்தியது.
சமூக வலைதள செயல்பாடுகள் தொடர்பாக இவர் வேட்பாளர் நிலையில் இருந்து விலக்கப்பட்டார்.
“இவர்களை கனடிய அரசு தடுத்து நிறுத்தி இந்தியாவுக்கு நாடு கடத்தினால், பிரதமர் மோடி அவர்களை கவனித்துக் கொள்வார்” என Don Patel தனது சமூக வலைதளத்தில் முன்னர் பதிவிட்டிருந்த கருத்து வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையாகியுள்ளது.
இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கட்சியின் பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கனடியர்களின் பாதுகாப்பை Conservative கட்சி எப்போதும் உறுதிப்படுத்தும் என கூறிய அவர், Don Patel இனி Conservative கட்சி வேட்பாளர் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
ஏற்கனவே Conservative கட்சியின் Windsor-Tecumseh-Lakeshore தொகுதி வேட்பாளர் Mark McKenzie, Montréal Laurier-Sainte-Marie தொகுதி வேட்பாளர் Stefan Marquis, New Westminster-Burnaby-Maillardville தொகுதியில் வேட்பாளர் Lourence Singh ஆகியோர் செவ்வாய்கிழமை (01) தேர்தலில் இருந்து விலக்கப்பட்டனர்.
ஏற்கனவே Liberal கட்சி Calgary-Confederation தொகுதி வேட்பாளர் homas Keeper-ரை தகுதி நீக்கம் செய்துள்ளது.
தவிரவும் தேர்தலில் இருந்து விலகும் முடிவை Markham-Unionville தொகுதியில் Liberal கட்சி வேட்பாளர் Paul Chiang எடுத்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆளுநர் நாயகம் – மகாராணி சந்திப்பு

Lankathas Pathmanathan

North Bay அருகே வீதி விபத்து ; தமிழ் யுவதி மரணம்

Gaya Raja

Quebec கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் கடலில் மூழ்கியதில் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment