அமெரிக்காவின் ‘நியாயமற்ற’ வர்த்தக போர் குறித்து Mexico ஜனாதிபதியுடன் கனடிய பிரதமர் உரையாடினார்.
கனடிய பிரதமர் Mark Carney, Mexico ஜனாதிபதி Claudia Sheinbaum ஆகியோருக்கு இடையிலான உரையாடல் செவ்வாய்கிழமை நிகழ்ந்தது.
அமெரிக்காவின் “நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடும்” கனடாவின் திட்டம் குறித்து இருவரும் உரையாடியதாக கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
வரவிருக்கும் சவாலான காலங்களில், ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் மதிக்கும் அதே நேரத்தில் வட அமெரிக்க போட்டித்தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த உரையாடலில் இரு நாட்டின் தலைவர்களும் வலியுறுத்தினர்.
“கனடாவுக்கு எதிரான நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான தனது திட்டத்தையும் பிரதமர் Mark Carney இந்த உரையாடலில் எடுத்துரைத்தார்” எனவும் பிரதமர் அலுவலகம் கூறியது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றத்தில் இருந்து Donald Trump, கனடா Mexico மீதான வரிகளை அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.