அமெரிக்காவின் உலகளாவிய வரி கட்டணங்களால் கனடா இம்முறை குறைந்த அளவில் பாதிப்பை எதிர்பார்க்கிறது.
சர்வதேச அளவில் புதன்கிழமை (02) மீண்டும் வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அறிவித்துள்ளார்.
இந்த வார அமெரிக்காவின் வரி கட்டண அறிவிப்பில், கனடா ஏனைய வர்த்தக பங்காளிகளை விட குறைவான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
New Brunswick முதல்வர் Susan Holt இந்தக் கருத்தை தெரிவித்தார்.
மாகாண, பிராந்திய தலைவர்களுடன் பிரதமர் Mark Carney வெள்ளிக்கிழமை (28) நடத்திய பேச்சுக்களின் போது இந்த விடயம் உரையாடப்பட்டது.
பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக வெள்ளிக்கிழமை Donald Trump-புடன் பிரதமர் Mark Carney உரையாடினார்.
இந்த உரையாடல் நட்பு ரீதியானதும், நேர்மறையானதாக இருந்தது என கூறிய Mark Carney, கனடாவின் இறையாண்மையை அமெரிக்க ஜனாதிபதி மதித்தார் எனவும் கூறினார்.