உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார்.
அமைதி ஒப்பந்தத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லையென்றால் ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் Melanie Joly வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன், அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் வார்த்தை மோதலின் பின்னர் Melanie Jolyயின் இந்தக் கருத்து வெளியானது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கனடிய, ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைனுக்கு தமது ஆதரவை வெளியிட்டனர்.
நியாயமான, நீடித்த அமைதியை அடைவதில் உக்ரைனுடனும், உக்ரைனியர்களுடனும் கனடா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.