Liberal கட்சியின் புதிய தலைமை பதவி போட்டிக்கான வேட்பாளர்களின் முதலாவது விவாதம் திங்கட்கிழமை (24) நடைபெறுகிறது.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
இந்த போட்டியில் Mark Carney, Chrystia Freeland, Karina Gould, Frank Baylis, ஆகியோர் உள்ளனர்.
இவர்களுக்கு இடையிலான இரண்டு விவாதங்களில் ஒன்று திங்களன்று நடைபெறுகிறது.
இந்த விவாதம் French மொழியில் நடைபெறவுள்ளது.
Montreal நகரில் நடைபெறவுள்ள இந்த விவாதம் இரவு 8 மணியில் முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் இரண்டாவது விவாதம் ஆங்கில மொழியில் செவ்வாய்கிழமை (25) நடைபெறுகிறது.
Liberal கட்சி இந்த இரண்டு விவாதங்களையும் தயாரிக்கிறது.
March 9 ஆம் திகதி பிரதமர் Justin Trudeauவுக்கு பதிலாக Liberal கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இரண்டு வாரங்கள் மாத்திரம் உள்ளன.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் நிலை உள்ளது.