Alliston நகருக்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் மூவர் பலியாகினர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (14) Ontario மாகாணத்தின் New Tecumseth நகரில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
Pickup truck, பயணிகள் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதில் பலியான மூவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் இவர்கள் விபத்துக்குள்ளான பயணிகள் வாகனத்தில் பயணித்தனர் எனவும் தெரியவருகிறது.
இதில் விபத்துக்குள்ளான ஒரு வாகனத்தின் சாரதியான 25 வயதான Brampton நகரை சேர்ந்த ஆண் சம்பவ இடத்தில் மரணமடைந்தார்
ஒரு வாரத்தின் பின்னர், Brampton நகரை சேர்ந்த 25 வயது பெண், 23 வயது இளைஞர் ஆகியோரும் இந்த விபத்தில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் புதிய விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.