முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு தனது வேட்பாளர்களுக்கு NDP தெரிவித்துள்ளது.
பொது தேர்தலுக்கு தயாராகுமாறு தனது வேட்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் NDP கோரியுள்ளது.
NDP தேசிய பிரச்சார இயக்குனர் Jennifer Howard இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
March 10 திகதிக்குள் இந்த திடீர் தேர்தல் நடைபெறுவதற்கு தயாராக இருக்குமாறு அந்தக் கடிதத்தில் அனைத்து வேட்பாளர்களுக்கும் பிரச்சார ஊழியர்களுக்கும் அவர் எச்சரித்துள்ளார்.
“தேர்தல் நேரம் மற்றும் திட்டமிடல்” என்ற தலைப்பில் புதன்கிழமை (12) சுமார் 140 நியமன வேட்பாளர்களுக்கும் அவர்களின் ஏற்பாட்டுக் குழுக்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டது.
March 9 ஆம் திகதி Mark Carney அடுத்த Liberal தலைவராக வேற்றிபெறுவதக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன என NDPயின் 2025 தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தும் Jennifer Howard குறிப்பிட்டார்.
Mark Carney தலைமை பதவியை வென்றால், விரைவில் ஒரு தேர்தலுக்கு அழைப்பு விடுக்க அவர் உத்தேசித்துள்ளதாக தெரியவருகிறது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்படுகிறது.