February 22, 2025
தேசியம்
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வலுவான வர்த்தக உறவுகளை நாடும் கனடா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வலுவான வர்த்தக உறவுகளை கனடா நாடுகிறது.

அமெரிக்கா ஜனாதிபதியின் வரி கட்டணங்களால் இரு பிராந்தியங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் கனடா இந்த வர்த்தக உறவுகளை நாடுகிறது.

கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த விரும்புகிறது என கனடாவின் வர்த்தக அமைச்சர் Mary Ng சனிக்கிழமை (08) தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து உரையாட அமைச்சர் Mary Ng ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத் தலைவரை சனிக்கிழமை சந்தித்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை (07) ஜெனிவாவில் உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குனர் Ngozi Okonjo-Iwealaவை அமைச்சர் Mary Ng சந்தித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் 2017 முதல் ஒரு தடையற்ற வர்த்தக உடன்படிக்கையால் பயனடைந்துள்ளன.

இது இருதரப்பு வர்த்தகத்தை 65 சதவீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஒரு வாரத்திற்கு முன்னர் கனடிய இறக்குமதிக்கு எதிரான வரி  கட்டணங்களை அறிவித்தார்.

அதற்கு பதில் நடவடிக்கைகளை கனடா அறிவித்த நிலையில், இந்த வரி விதிப்பை 30 நாட்கள் இடைநிறுத்துவதாக Donald Trump கூறினார்.

இந்த நிலையில் வரி கட்டணங்கள் விதிக்கப்பட்டால் கனடா உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவுக்கு சவால் விடக்கூடும் என Mary Ng கூறினார்.

கனடா விதிகள் அடிப்படையிலான வர்த்தக முறையை நம்பும் நாடு என நினைவுபடுத்திய அமைச்சர், இந்த விடயத்தில் கனடா தனக்கு கிடைக்கும் அனைத்து தேர்வுகளையும் கருத்தில் கொள்ளும் என கூறினார்.

Related posts

உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை நீட்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

Quebec காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தி கொலை

Lankathas Pathmanathan

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment