கனடா அமெரிக்கா எல்லையில் கடந்த 3 வாரங்களில் RCMP பணியாளர்கள் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
RCMP ஆணையர் Mike Duheme இந்தத் தகவலை தெரிவித்தார்.
கனடிய எல்லை பாதுகாப்பை அதிகரிக்காவிட்டால் கணிசமான வரி கட்டணங்களை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த பணியாளர் அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
RCMP ஏனைய இடங்களிலிருந்து வளங்களை தற்காலிகமாக இடம் மாற்றுவதன் மூலம் எல்லையில் அதன் பிரசன்னத்தை அதிகரித்துள்ளதாக Mike Duheme தெரிவித்தார்.