தேசியம்
செய்திகள்

Saskatchewan முதல் குடியிருப்பு பகுதியில் நால்வர் மரணம் – விசாரணைகளை தொடரும் RCMP

Saskatchewan முதல் குடியிருப்பு பகுதியில் நால்வர் மரணமடைந்தனர்.

இதன் சம்பவம் குறித்து RCMP விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Carry the Kettle Nakoda முதல் குடியிருப்பு பகுதியில் நான்கு பேர் இறந்ததை Saskatchewan RCMP உறுதி செய்துள்ளது.

இந்த மரணங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை RCMP தேடி வருகிறது.

29 வயதான Keagan Panipekeesick என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

முன்னர் Sakimay First Nation என அழைக்கப்பட்ட Zagime Anishinabek பகுதியில் செவ்வாய்க்கிழமை (04) பிற்பகல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் போது இவர் குடியிருப்பாளர்களை நோக்கி துப்பாக்கியை காட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நேரத்தில், Carry the Kettle Nakoda முதல் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த நான்கு மரணங்களுடன் இவர்  தொடர்புபட்டுள்ளாரா   என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Related posts

முதலாவது தொகுதி Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடைந்தன!

Gaya Raja

மீண்டும் குறைந்தது வட்டி விகிதம்

Lankathas Pathmanathan

மீண்டும் ஐரோப்பா பயணமாகும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

Leave a Comment