அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை இடை நிறுத்த Ontario மாகாணம் முடிவு செய்துள்ளது.
மாகாண அரசுக்கு சொந்தமான கடைகளில் இருந்து அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்துவது உட்பட Ontario மாகாணம் அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை முடிவு செய்திருந்தது.
கனடிய தயாரிப்புகள் மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்த மறுநாள் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (04) முதல் இந்த பொருளாதார நடவடிக்கைகள் நடைமுறையில் வரும் என Ontario மாகாண முதல்வர் Doug Ford அறிவித்திருந்தார்.
ஆனால் கனடிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 30 நாட்களாக தாமதப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தனது முடிவை இடைநிறுத்த Doug Ford தீர்மானித்துள்ளார்.
Ontario மாகாணம் அமுல்படுத்த தயாராக இருந்த நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக Doug Ford திங்கட்கிழமை (03) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வரி விதிப்பை இடைநிறுத்தி உள்ள நிலையில், Ontario மாகாணம் பதில் நடவடிக்கைகளை இடைநிறுத்தும் என முதல்வர் கூறினார்.
அமெரிக்காவின் இந்த மனமாற்றத்தை ஒன்றிணைந்த அனைத்து கனடியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
Ontario தற்காலிகமாக பதில் நடவடிக்கைகளை இடைநிறுத்தி உள்ள நிலையில், கனடிய பொருட்கள் மீதான வரிகள் மீண்டும் விதிக்கப்பட்டால் மாகாணம் மீண்டும் எளிதாக பதில் நடவடிக்கைகளை செயல்படுத்தும் என Doug Ford எச்சரித்தார்.