Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர்கள் தமது பெயர்களை பதிவு செய்யக்கூடிய இறுதி நாள் வியாழக்கிழமை (23) ஆகும்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் நிலை உள்ளது.
வேட்பாளர்கள் தமது பெயர்களை January 23 ஆம் திகதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கோரப்பட்டது.
வேட்பாளர்கள் வியாழன் மாலை 5 மணிக்குள் போட்டியிடும் எண்ணத்தை அறிவித்து, தமது ஆவணங்களை சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்களை கட்சி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க பத்து நாட்கள் வரை எடுக்கலாம் என் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை தமது பெயர்களை பதிவு செய்தவர்களின் எவரும அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழன் காலை வரை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carney, முன்னாள் நிதியமைச்சர் Chrystia Freeland, Ottawa நாடாளுமன்ற உறுப்பினர் Chandra Arya ஆகியோர் தேவையான ஆவணங்களையும் ஆரம்ப $50,000 வைப்புத் தொகையையும் கட்சிக்கு சமர்ப்பித்ததாகக் கூறினர்.
முன்னாள் அரசாங்க குழு தலைவர் Karina Gould, Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Jaime Battiste, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் Frank Baylis, Ruba Dhalla ஆகியோரும் தலைமை பதவிக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.