கனடிய இறக்குமதிகளுக்கு February 1 முதல் வரி விதிக்கப்படும் என Donald Trump முன்வைத்த கருத்து ஆச்சரியமளிக்கவில்லை என கனடிய மத்திய அரசு தெரிவித்தது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்றார்.
இந்த நிலையில் February 1 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என Donald டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
திங்கள் இரவு வெள்ளை மாளிகையில் நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டபோது Donald Trump இந்த தகவலை வெளியிட்டார்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என கனடாவின் நிதியமைச்சர் Dominic LeBlanc திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விடயத்தில் ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்ததை விட தற்போது புதிதாக எதுவும் இல்லை என Donald Trump கருத்து குறித்து Dominic LeBlanc தெரிவித்தார்.
இந்த விடயத்தில் மத்திய அரசாங்கத்திடம் ஒரு திட்டம் உள்ளது என கனடியர்களுக்கு உறுதியளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் Melanie Joly திங்கள் இரவு கூறினார்.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு அரசியல் தலைவரையும் இந்த விடயத்தில் ஒற்றுமையாக இருக்க அமைச்சர் Melanie Joly அழைப்பு விடுத்துள்ளார்.