அமெரிக்க ஜனாதிபதியாக Donald Trump பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக கனடிய அரசியல் தலைவர்கள் பலர் Washington சென்றடைந்தனர்.
மத்திய தொழில்துறை அமைச்சர் François-Philippe Champagne, மத்திய வர்த்தக அமைச்சர் Mary Ng, Alberta முதல்வர் Danielle Smith, Newfoundland and Labrador முதல்வர் Andrew Furey, Ontario மாகாண எரிசக்தித் துறை அமைச்சர் Stephen Lecce, Ontario மாகாண வர்த்தக அமைச்சர் Vic Fedeli, Quebec மாகாண சர்வதேச உறவுகள் அமைச்சர் Martine Biron, Liberal நாடாளுமன்ற அமைச்சர் MP John McKay ஆகிய கனடிய அரசியல் தலைவர்கள் Washington சென்றடைந்தனர்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்கிறார்.
பதவி ஏற்றவுடன் அனைத்து கனடிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க அவர் எச்சரித்து வருகின்றார்.
இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள கனடிய அரசியல் தலைவர்களில் பலர் Washington நகரில் உள்ள கனடிய தூதரகத்தில் நடைபெறும் பதவியேற்பு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.