Scarborough Health Network (SHN) வைத்தியசாலைகளில் இரண்டு பிரதான பொறுப்புகளில் தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியர் இளன் அம்பலவாணர் (Dr. Elan Ambalavanar) அவசர சிகிச்சை பிரிவின் புதிய தலைமை பதவியையும், மருத்துவ இயக்குநர் பதவியையும் ஏற்றுள்ளார்.
அதேவேளை அவசர சிகிச்சை பிரிவின் துணைத் தலைவராக வைத்தியர் மயோரேந்திரா (மயோ) ரவிச்சந்திரன் (Dr. Mayoorendra (Mayo) Ravichandiran) நியமிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (06) இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டன.
இவர்கள் இருவரும் சுகாதார தலைமை பொறுப்புகளில் நீண்ட கால அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.