நாடாளுமன்ற அமர்வுகள் March 24 வரை ஒத்திவைக்கப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்கும் முடிவை பிரதமர் Justin Trudeau எடுத்துள்ளார்.
Liberal தலைவர் பதவியில் இருந்து Justin Trudeau விலகுவதாக திங்கட்கிழமை (06) அறிவித்தார்.
புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்க Justin Trudeau முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் திங்கள் காலை ஆளுநர் நாயகம் Mary Simonனை சந்தித்த பிரதமர், March 24 வரை நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்குமாறு கோரினார்.
இந்த கோரிக்கையை ஆளுநர் நாயகம் ஏற்றுக் கொண்டதாக செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடையும் வாய்ப்பை எதிர்கொள்ளாமல் விரைவான தலைமைத்துவ போட்டியை நடத்துவதற்கு Liberal கட்சிக்கு கால அவகாசம் வழங்குவதற்காக இந்த நாடாளுமன்ற ஒத்திவைப்பு அனுமதிக்கிறது.
எதிர்வரும் 27ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் March 24 வரை அமர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.