Brampton நகர இல்லம் ஒன்றில் கடத்தப்பட்ட மூன்று பேரை Peel பிராந்திய காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து 10 சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
கடத்தல் விசாரணைக்காக இல்லம் ஒன்றுக்கு சென்ற காவல்துறையினர் அங்கு மூன்று பேரை மீட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் Brampton நகரில் உள்ள Ontario நீதிமன்றத்தில் சிறப்பு பிணை விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.