பிரதமர் Justin Trudeau தனது அமைச்சரவையில் 8 புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொண்டார்.
நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட Justin Trudeau அரசின் முழு அமைச்சரவை மாற்றம் வெள்ளிக்கிழமை (20) அறிவிக்கப்பட்டது.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் 4 அமைச்சர்களுக்கு புதிய இலாகாக்களை பிரதமர் மீண்டும் நியமித்தார்.
தவிரவும் 8 Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஆளுநர் நாயகத்தின் தலைமையில் வெள்ளி காலை நடந்த புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழாவில் Justin Trudeau கலந்து கொண்டார்.
இந்த அமைச்சரவை மாற்றங்கள்:
- Ontario நாடாளுமன்ற உறுப்பினர் Nathaniel Erskine-Smith, Housing, Infrastructure and Communities அமைச்சர்
- Ontario நாடாளுமன்ற உறுப்பினர் David McGuinty, Public Safety அமைச்சர்
- Quebec நாடாளுமன்ற உறுப்பினர் Rachel Bendayan, Official Languages அமைச்சர், Public Safety இணை அமைச்சர்
- Quebec நாடாளுமன்ற உறுப்பினர் Élisabeth Brière, National Revenue அமைச்சர்
- Manitoba நாடாளுமன்ற உறுப்பினர் Terry Duguid, Sport, minister responsible for Prairies Economic Development Canada.
- Nova Scotia நாடாளுமன்ற உறுப்பினர் Darren Fisher, Veterans Affairs அமைச்சர் – Defence இணை அமைச்சர்
- Newfoundland and Labrador நாடாளுமன்ற உறுப்பினர் Joanne Thompson Seniors அமைச்சர்
- Ontario நாடாளுமன்ற உறுப்பினர் Ruby Sahota minister responsible Federal Economic Development Agency for Southern Ontario
தற்போதைய அமைச்சர்களுக்கு புதிய அமைச்சு பதவிகள்:
- அனிதா ஆனந்த் Transport, Internal trade அமைச்சர்
- கரி ஆனந்தசங்கரி, Northern Affairs and Canadian Northern Economic Development Agency அமைச்சர்
- Steven MacKinnon, Employment, Workforce development and Official languages அமைச்சர்
- Ginette Petitpas Taylor கருவூல வாரியத் தலைவர்.