பிரதமர் பதவியில் இருந்து Justin Trudeau விலக வேண்டும் என் Ontario Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Ontario மாகாணத்தை சேர்ந்த 75 Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் வார விடுமுறையில் சந்தித்து தங்கள் கட்சியின் தலைமைத்துவம் குறித்து விவாதித்தனர்.
இந்த கூட்டத்தில், Justin Trudeauவின் தொடர்ச்சியான தலைமைக்கு ஆதரவாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனாலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர்.
இந்த கூடத்தில் அண்மையில் அமைச்சரவையில் இருந்து விலகிய துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தின் முடிவை பிரதமரிடம் தெரிவிக்கும் பொறுப்பு, Ontario மாகாண Liberal நாடாளுமன்ற குழுவின் தலைவரான Michael Coteau இடம் வழங்கப்பட்டுள்ளது.