அரசாங்கத்திற்கு எதிரான “நம்பிக்கையில்லா தீர்மானத்தை” தனது கட்சி முன்வைக்கும் என NDP தலைவர் தெரிவித்தார்.
அடுத்த நாடாளுமன்ற சபை அமர்வில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படும் என Jagmeet Singh கூறினார்.
பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த கருத்தை Jagmeet Singh முன்வைத்தார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வில் NDP முன்வைக்க எச்சரிக்கைக்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஓர் தேர்தலை தூண்டும் சாத்தியக்கூற்றை தோற்றுவித்துள்ளது.
Liberal கட்சி மற்றொரு வாய்ப்புக்கு தகுதியற்றவர்கள் என வெள்ளிக்கிழமை காலை பகிரங்கமாக பகிரப்பட்ட ஒரு கடிதத்தில் Jagmeet Singh குறிப்பிட்டார்.
அதனால்தான் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு NDP வாக்களிக்கும், எனகூறிய Jagmeet Singh , கனடியர்கள் தங்களுக்கான ஒரு அரசாங்கத்திற்கு வாக்களிக்க ஒரு வாய்ப்பை இது வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னாள் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland உட்பட இரண்டு அமைச்சர்கள் பதவி விலகிய ஒரு வாரத்தில் இந்த நிலைப்பாட்டை NDP கட்சி வெளியிட்டுள்ளது.