December 30, 2024
தேசியம்
செய்திகள்

Justin Trudeau பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர்கள் அழைப்பு

பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என்ற அழைப்பு எதிர்க்கட்சி தலைவர்களால் முன்வைக்கப்படுகிறது.

அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland திங்கட்கிழமை (16) காலை அறிவித்தார்.

நிதி அமைச்சர் பதவியில் Chrystia Freeland இருப்பதை பிரதமர் Justin Trudeau விரும்பவில்லை என பிரதமர் கூறிய நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக Chrystia Freeland தெரிவித்தார்.

இந்த நிலையில் Justin Trudeau பதவி விலக வேண்டும் என Conservative தலைவர் Pierre Poilievre, Bloc Québécois தலைவர் Yves-François Blanchet, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் வலியுறுத்தினர்.

“அனைத்தும் கட்டுக்கடங்காமல் போய்விட்டது” என்பதை Chrystia Freeland பதவி விலகல் அறிவித்தல் தெளிவுபடுத்தியுள்ளதாக Pierre Poilievre கூறினார்.

தேர்தலுக்கான நேரம் இது எனவும் அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பிரதமர் ஆளுநர் நாயகத்திடம் கோரவேண்டும் என Yves-François Blanchet வலியுறுத்தினார்.

“Justin Trudeau பதவி விலக வேண்டும் என நாங்கள் கோருகிறோம்” என Jagmeet Singh செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிப்பது குறித்து தெளிவான பதில் எதையும் அவர் வழங்கவில்லை.

Related posts

கடுமையான பயண நடவடிக்கைகள்: மத்திய அரசு ஆலோசனை

Lankathas Pathmanathan

B.C. மாகாண Quesnel நகர முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடிய மத்திய வங்கி சில ஆண்டுகளில் $8.8 பில்லியன் இழக்கக்கூடும்!

Lankathas Pathmanathan

Leave a Comment