தேசியம்
செய்திகள்

அமைச்சரவையில் இருந்து விலகினார் Chrystia Freeland

அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (16) காலை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு கடிதத்தில் இந்த முடிவை அவர் அறிவித்தார்.
நிதி அமைச்சர் பதவியில் Chrystia Freeland இருப்பதை பிரதமர் Justin Trudeau விரும்பவில்லை என அவர் கூறிய நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக Chrystia Freeland தெரிவித்தார்.
Chrystia Freelandக்கு Justin Trudeau அமைச்சரவையில் மற்றொரு பதவியை வழங்க முன்வந்த போதிலும் அதை Chrystia Freeland மறுத்து பதவி விலகியுள்ளார்.
இலையுதிர் கால பொருளாதார அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்த அறிவித்தல் வெளியானது.
Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க உள்ளதாகவும் , அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் Chrystia Freeland உறுதியளித்தார்.

Related posts

80 சதவீதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கக்கூடிய நிலையில் கனடா உள்ளது: தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja

வாகனத் திருட்டு குற்றத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட 6 பேர் கைது

Lankathas Pathmanathan

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment