அனைத்துலக தமிழர் பேரவை என்ற புதிய அமைப்பு ஒன்று கனடாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
புலம்பெயர் நாடுகளிலும், தாயகத்திலும் உள்ள தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் இந்த அமைப்பு உருவாகிறது.
இந்த அமைப்பின் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (08) Scarborough நகரில் உள்ள JCs Banquet மண்டபத்தில் பிற்பகல் 3 மணி முதல் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
தமிழர்களின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் அபிலாசைகளை மேம்படுத்துவதுடன், உலகளாவிய ஈழத் தமிழ் சமூகத்தை மேம்படுத்துவது இந்த அமைப்பின் இலக்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.