December 12, 2024
தேசியம்
செய்திகள்

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முன்மொழிவுகளை வழங்கிய Canada Post நிர்வாகம்!

தொடரும் Canada Post வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை  எட்டுவதற்கான முன்மொழிவுகளை Canada Post  நிர்வாகம், தொழில் சங்கத்திற்கு வழங்கியுள்ளது.

இந்த முன்மொழிவு ஞாயிற்றுக்கிழமை தொழிற்சங்கத்திற்கு வழங்கப்பட்டதாக Canada Post நிர்வாகம் கூறியது.

இந்த முன்மொழிவுகள் மத்தியஸ்தர் ஆதரவுடன் இரு தரப்பினருக்கும் இடையில் மீண்டும் விவாதங்களை ஆரம்பிக்கும் என நம்புவதாக Canada Post நிர்வாகம் தெரிவித்தது.

ஆனாலும் இந்த முன்மொழிவுகள் குறித்து கனடிய தபால் ஊழியர் சங்கத்தின் தொழில் சங்கம் உடனடியாக பதில் எதையும் வழங்கவில்லை.

நாடாளாவிய ரீதியில் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டு வாரங்கள் தாண்டி தொடர்கிறது.

தொடரும் வேலை நிறுத்தத்தில் ஒரு தீர்வைக் காண்பதற்கு இரு தரப்பினர்  மட்டுமே பொறுப்பு என தொழிலாளர் அமைச்சர் Steven MacKinnon அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தில் இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவ நியமிக்கப்பட்ட மத்திய அரசின் சிறப்பு மத்தியஸ்தர் தனது மத்தியஸ்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலய வெடி விபத்தில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan

தற்காலிக GST வரி நீக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது

Lankathas Pathmanathan

COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் – Federal Government proposes extending of COVID-19 supports

Lankathas Pathmanathan

Leave a Comment