தேசியம்
செய்திகள்

அமெரிக்காவின் கனடிய எல்லையை மெக்சிகோவுடன் ஒப்பிட முடியாது: Justin Trudeau

அமெரிக்காவின் கனடிய எல்லையை மெக்சிகோவுடன் ஒப்பிட முடியாது என Donald Trumpபிடம் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trumpபிக்கும், கனடிய பிரதமர் Justin Trudeauவுக்கும்  இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (29) இரவு இவர்கள் இருவரும் சந்தித்தனர்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து கனடிய பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என Donald Trump அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் Donald Trumpபை Justin Trudeau, வெள்ளி இரவு உணவுக்கு சந்தித்தார் .

இந்த சந்திப்பு மிகவும் பிரதானமானது என அமெரிக்காவுக்கான கனடா தூதர் Kirsten Hillman தெரிவித்தார்.

Kirsten Hillman இந்த சந்திப்பில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

November 5ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க தேர்தலுக்குப் பின்னர் G7 நாடுகளில் இருந்து Donald Trumpபை சந்திக்கும் முதல் தலைவர் Justin Trudeau ஆவார்.

பிரதமர் Justin Trudeau தலைமையிலான குழுவினர் Donald Trump தலைமையிலான குழுவினர சந்தித்தபோது, எல்லை பாதுகாப்பு, வர்த்தகம் குறித்த விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

போதைப்பொருள், அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்கள் போன்ற விடயத்தில் கனடாவை மெக்சிகோவுடன் இணைத்துக் கொள்வது நியாயமற்றது என Justin Trudeau இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு ஒரு சிறந்த உரையாடலாக அமைந்தது என Justin Trudeau குறிப்பிட்டார்.

அதேவேளை இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய பல முக்கியமான விடயங்கள் குறித்து விவாதித்ததாக Donald Trump  தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்படுவது குறித்த விடயத்தில் உத்தரவாதம் எதுவும் இல்லாமல் இந்த சந்திப்பு முடிவடைந்தது.

Justin Trudeau சனிக்கிழமை (30) மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்தது.

Related posts

மோசடி குற்றச்சாட்டில் இருவர் கைது – மூவரை தேடிவரும் OPP

Lankathas Pathmanathan

பிரதமரின் Jamaica விடுமுறை குறித்து மீண்டும் எழும் கேள்விகள் !

Lankathas Pathmanathan

இரண்டாயிரத்தை அண்மிக்கும் COVID தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment