December 12, 2024
தேசியம்
செய்திகள்

மூன்றாவது காலாண்டில் கனடாவின் பொருளாதாரம் ஒரு சதவீதம் வளர்ச்சி

மூன்றாவது காலாண்டில் கனடாவின் பொருளாதாரம் ஒரு சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கனடியப் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் ஒரு சதவீத வருடாந்திர விகிதத்தில் வளர்ந்தது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை – 29 – இந்த தகவலை வெளியிட்டது.

அதிக குடும்ப, அரசாங்க செலவினங்களால் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது.

இது கனடிய மத்திய வங்கியின் காலாண்டு திட்டமான 1.5 சதவீதத்திற்கும் குறைவானதாகும்.

இந்த வளர்ச்சி குறைந்த வணிக முதலீடு, ஏற்றுமதியால் ஈடுசெய்யப்பட்டது என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.

அதேவேளை இரண்டாம் காலாண்டு வளர்ச்சியை 2.1 சதவீதத்தில் இருந்து 2.2 சதவீதமாக புள்ளிவிவரத் திணைக்களம் மாற்றியது.

Related posts

Ansar Allah இயக்கத்தை பயங்கரவாத குழுவாக தடை செய்ய வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கனேடிய பொது தேர்தலில் மேலும் ஒரு தமிழ் வேட்பாளர்!

Gaya Raja

ஒருவர் மரணமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தமிழர் மீது குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment