தேசியம்
செய்திகள்

தற்காலிக GST வரி நீக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது

மத்திய அரசாங்கத்தின் இரண்டு மாத கால GST வரி நீக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.
C-78 எனப்படும் இந்த சட்டமூலம்  வியாழக்கிழமை – 29 – நிறைவேற்றப்பட்டது.
நிதியமைச்சர் Chrystia Freeland, புதன்கிழமை – 28 – நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை அறிமுகப்படுத்தினார்.
வியாழன் நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசாங்கத்துடன் இணைந்து NDP, பசுமை கட்சிகள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
Conservative கட்சி இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தது.
இந்த  இரண்டு மாத கால GST வரி நீக்கததை பிரதமர் Justin Trudeau அண்மையில் அறிவித்தார்.
இந்த சட்டமூலம் Senate சபையில் இரண்டாவது சுற்று ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வாக்குறுதியளிக்கப்பட்ட December 14 முதல் இந்த GST வரி நீக்கம் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஆரம்பமானது 47வது Toronto சர்வதேச திரைப்பட விழா

Lankathas Pathmanathan

கடுமையான குளிர்கால வானிலை கனடாவின் சில பகுதிகளில் தொடர்கிறது

Lankathas Pathmanathan

Ontarioவை மீளத் திறக்கும் திட்டம் அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment