கனடிய டொலரின் பெறுமதி மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது.
May 2020க்குப் பின்னர் கனடிய டொலர் மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தது.
அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கனடிய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என Donald Trump எச்சரித்திருந்தார்.
இதன் எதிரொலியாக கனடிய டொலர் மிகக் குறைந்த நிலைக்கு செவ்வாய்க்கிழமை (26) சரிந்தது.
செவ்வாயன்று கனடிய டொலரின் பெறுமதி 71 அமெரிக்க சதத்திற்கும் கீழ் சரிந்தது.
பலவீனமான பொருளாதாரம், கனடிய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்புகளால் கனடிய டொலர் ஏற்கனவே பலவீனமடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.