தேசியம்
செய்திகள்

வாகன திருட்டு, வீட்டுக் கொள்ளை விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைது

வாகன திருட்டு, வீட்டுக் கொள்ளை விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று கைதுகள் குறித்து Toronto காவல்துறை பொதுமக்களுக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளது.

November 1 ஆம் திகதி Peel நகரில் நிகழ்ந்த வாகன திருட்டு, November 13 ஆம் திகதி Toronto நகரில் நிகழ்ந்த இரண்டு வீட்டுக் கொள்ளை, November 18 ஆம் திகதி Toronto நகரில் நிகழ்ந்த வாகன விபத்து குறித்த விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

கைதானவர்களில் Markham நகரை சேர்ந்த 33 வயதான அபிரா பொன்னையா, Pickering நகரை சேர்ந்த 31 வயதான அனெஸ்டன் கணேசமூர்த்தி ஆகியோரும் அடங்குகின்றனர்.

தவிரவும் Toronto நகரை சேர்ந்த 19  வயதான Khasim Mohammed என்பவரும் இந்த விசாரணையில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இந்த விசாரணை தொடரும் நிலையில், மேலும் குற்றச்சாட்டுகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

தேர்தலுக்குத் தயார்

Lankathas Pathmanathan

கனடிய கொடியை Olympics ஆரம்ப நிகழ்வில் ஏந்திச் செல்பவர்கள் தெரிவு!

Gaya Raja

Ontarioவை மீண்டும் திறக்கும் திகதியை முன் நகர்த்துவது குறித்து முதல்வர் பரிசீலனை?

Gaya Raja

Leave a Comment