Donald Trump வெள்ளை மாளிகைக்கு திரும்ப உள்ள நிலையில், கனடாவின் எல்லை ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கனடிய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக Donald Trump வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கனடாவின் எல்லையில் ஏற்படுத்த கூடிய பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தி வருவதாக துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்.
எமது சொந்த எல்லையை கட்டுப்படுத்துவது கனடியர்களுக்கு முக்கியமானதும் அடிப்படையானதும் என அவர் புதன்கிழமை (06) செய்தியாளர்களிடம் கூறினார்.
எல்லைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் முற்றிலும் அங்கீகரிக்கிறது என்பதை கனடியர்களுக்கு உறுதி அளிக்க விரும்புவதாக Chrystia Freeland தெரிவித்தார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, கனடாவில் சாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு கொள்கைகளை Donald Trump அறிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து மில்லியன் கணக்கான ஆவணமற்ற குடியேறியவர்களை நாடு கடத்துவது இதில் பிரதானமானதாகும்.
அந்த வாக்குறுதியானது, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு தப்பிச் செல்ல தூண்டலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இது கனடாவின் மாகாணங்கள், பிரதேசங்களில் பெரும் சேவை தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
Donald Trumpபின் முதலாவது ஆட்சிக் காலத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தத்தின் – Safe Third Country Agreement – அடிப்படையில் Quebec மாகாண எல்லையின் ஊடாக தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து குறிப்பிடத்தக்கது.