February 22, 2025
தேசியம்
செய்திகள்

திருடப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்த குற்றச் சாட்டில் வாகன விற்பனை முகவர்கள் இருவர் கைது

திருடப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்த குற்றச் சாட்டில் வாகன விற்பனை முகவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Torontoவில் உள்ள ஒரு வாகன விற்பனை நிலையத்தில் பணிபுரியும் போது திருடப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ததாக இரண்டு சந்தேக நபர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் Barrie நகரை சேர்ந்த 35 வயதான Harris Bocknek, Mississauga நகரை சேர்ந்த 32 வயதான Fadi Zeto என அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் இருவரும் மொத்தம் 176 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

Project Warden என பெயரிடப்பட்ட இது குறித்த விசாரணை மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் $2,188,000.00 மதிப்புள்ள மோசடி, குற்றச் செயல்கள் தெடர்புடைய திட்டம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குறைந்தது 22 மோசடி வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் கைது தொடர்ந்து வரும் வாகன திருட்டு விசாரணையின் ஒரு பகுதி என தெரியவருகிறது.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

இமாலைய பிரகடனத்தை கனடிய அரசாங்கம் ஆதரிக்கவில்லை!

Lankathas Pathmanathan

ஒன்பது Airbus விமானங்களை கொள்வனவு செய்யும் மத்திய அரசு

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment