தேசியம்
செய்திகள்

மூன்று போராட்டங்கள் – காவல்துறை அதிகாரி காயம் – மூன்று பேர் கைது – காவல்துறை அதிகாரி கைது

இந்து ஆலயம் உட்பட Mississauga, Brampton நகரங்களில் மூன்று போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்தாலும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என Peel பிராந்திய  காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இரு குழுவினருக்கு இடையே வன்முறைத் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

எதிர்ப்பாளர்களுக்கும் வழிபாட்டாளர்களுக்கும் இடையில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.

இதில் ஒரு காவல்துறை அதிகாரி சிறிய காயங்களுக்கு உள்ளானார்.

இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

தவிரவும் போராட்டத்தில் ஈடுட்ட Peel பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

42 வயதான Mississauga வாசி Dilpreet Singh Bouns, 23 வயதான Brampton வாசி Vikas, 31 வயதான Mississauga வாசி Amritpal Singh ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அடையாளம் காணப்படாத நான்காவது நபர், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

பணியில் இல்லாத Peel பிராந்திய காவல்துறை அதிகாரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் குறித்து கனடிய, இந்திய பிரதமர்கள் இருவரும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.

இதனை ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Related posts

$70 மில்லியன் Lotto Max அதிஷ்டலாப சீட்டு Albertaவில் கொள்வனவு

Lankathas Pathmanathan

கனடாவுக்கான சீனத் தூதரை பல முறை விசாரணைக்கு அழைத்த கனடிய வெளிவிவகார அமைச்சு

Lankathas Pathmanathan

April, May மாதங்களில் $3.9 பில்லியன் பற்றாக்குறை பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment