Brampton நகரில் உள்ள இந்து ஆலயத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
Brampton நகரில் உள்ள இந்து சபா ஆலயத்தின் முன்பு இந்த போராட்டம் நிகழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (03) நிகழ்ந்த இந்த போராட்டம் குறித்து அறிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஆலயத்திற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் Peel பிராந்திய காவல்துறை கூறுகிறது.
இந்தப் போராட்த்தின் ஒரு பகுதியாக இரு குழுவினருக்கு இடையே வன்முறைத் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.
கலிஸ்தான் அரசியல்வாதிகளின் அனுதாபிகளின் ஆதரவின் கீழ் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை என குறிப்பிட அமைச்சர் அனிதா ஆனந்த், “இந்த சம்பவம் குறித்து கவலையடைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என Conservative கட்சி தலைவர் Pierre Poilievre கூறினார்.
ஏனைய அரசியல் தலைவர்களும் இந்த போராட்டம் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் Ruby Sahota, Mississauga நகரில் 7 ஆம் வட்டார சபை உறுப்பினர் Dipika Damerla உள்ளிட்ட பலரும் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளனர்.