கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய கடன் விகிதத்தில் கணிசமான குறைப்பை அறிவித்தது.
மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.25 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக குறைந்தது.
எதிர்பார்க்கப்பட்டது போல் புதன்கிழமை (23) இந்த வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்பட்டது.
இந்த அரை சதவீத குறைப்பு மத்திய வங்கியின் தொடர்ச்சியான நான்காவது வட்டி விகிதக் குறைப்பு ஆகும்.
பணவீக்கம் June மாதத்தில் 2.7 சதவீதத்தில் இருந்து September மாதத்தில் 1.6 சதவீதம் குறைந்த நிலையில் வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் கனடியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என வட்டி விகிதக் குறைப்பு குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.
பணவீக்கம் இப்போது 2 சதவீத இலக்கை எட்டியிருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem தெரிவித்தார்.