தேசியம்
செய்திகள்

Liberal கட்சி வலுவாகவும் ஐக்கியமாகவும் உள்ளது: Justin Trudeau

Liberal கட்சி வலுவாகவும் ஐக்கியமாகவும் இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.
நாடாளுமன்ற குழுவில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கட்சியின் ஐக்கியத்தில் எந்தவித கேள்வியும் இல்லை என பிரதமர் தெரிவித்தார்.
புதன்கிழமை (23) நடைபெற்ற Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார்.
கட்சியின் தலைவராக நீடிக்க விரும்புவதாகவும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மத்தியில் அவர் வலியுறுத்தினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டம் மூடிய அறைக்குள் நடைபெற்றது.
Liberal கட்சியின் தலைமையில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் ஒரு குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்தக் கோரிக்கையை  முன்வைத்ததாக தெரிய வருகிறது.
ஒரு வாரத்திற்குள் இந்த விடயம் குறித்து சிந்தித்து முடிவெடுக்குமாறு பிரதமருக்கு அவர்கள் காலக்கெடுவை வழங்கியுளதாகவும் தெரியவருகிறது.
Justin Trudeau தொடர்ந்து கட்சியின் தலைவராகத் தொடர முடிவு செய்தால் அதற்கான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.
ஆனாலும் அவ்வாறு நிகழ்ந்தால் அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டோம் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பிரதமரிடம் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமரை கட்சியின் தலைமையில்   இருந்து  வெளியேற்றும் முயற்சியில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறித்த சரியாக விபரங்கல் வெளியாகவில்லை.
இந்தப் பட்டியலில் குறைந்தது 20 பேர் இருக்கலாம் எனவும் இவர்கள் பெரும்பாலும் Atlantic கனடா, தென்மேற்கு Ontario நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரியவருகிறது.
பிரதமரை பதவி விலக கோரும் கடிதம் ஒன்றில், இந்த கூட்டத்திற்கு முன்னதாக Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் தெரியவந்தது.
ஆனாலும் இந்தக் கூட்டத்தில் இந்த பெயர்கள் அல்லது கையொப்பங்கள் அடக்கிய கடிதம் பிரதமரின் கையளிக்கப்படவில்லை என தெரியவருகிறது.
இந்த சந்திப்பின் பின்னர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் பிரதமருக்கான தமது ஆதரவை வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Scarborough மருத்துவமனை அறக்கட்டளைக்கு 250,000 சேகரித்த கனடிய தமிழர்கள்

Gaya Raja

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களை தணிக்க கனடா அழைப்பு

Lankathas Pathmanathan

OPP அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment