நாட்டிற்குள் அனுமதிக்கும் நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைந்தது 20 சதவீதம் குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
Justin Trudeau அரசாங்கம் இதற்கான மாற்றங்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது.
வியாழக்கிழமை (24) இந்த மாற்றம் அறிவிக்கப்படும் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிற்குள் அனுமதிக்கும் நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை தனது முந்தைய இலக்கான 500,000 இல் இருந்து குறைந்தபட்சம் 20 சதவிகிதம் கனடிய அரசாங்கம் குறைக்கும் என தெரியவருகிறது.
கனடாவிற்கு வரும் தற்காலிக, நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2024 இல் 485,000 ஆக உள்ள நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை 2027 ஆம் ஆண்டுக்குள் 365,000 ஆக குறைக்க மைதிய அரசாங்கம் முயல்கிறது.
நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கடந்த August மாதம் Halifax நகரில் நடைபெற்ற Liberal அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் Justin Trudeau கருத்து தெரிவித்திருந்தார்.
இது அவரது அரசாங்கத்தின் மிகப்பெரிய கொள்கை மாற்றமாக நோக்கப்படுகிறது.