தேசியம்
செய்திகள்

B.C. மாகாணசபை தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக ஒரு வாரங்கள் எடுக்கும்?

சனிக்கிழமை (19) நடைபெற்ற British Colombia மாகாணசபை தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக குறைந்தது ஒரு வாரங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் சுமார் 50,000 வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளதாக B.C. தேர்தல்கள் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை (20) அறிவித்தது.
இந்த வாக்குகளை எண்ணுவது, மீண்டும் எண்ணப்பட வேண்டிய வாக்குகளை எண்ணுவது தேர்தல் வாக்களிப்பின் இறுதி முடிவை தீர்மானிக்கும் என B.C. தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
43வது மாகாண பொதுத் தேர்தலில் ஆரம்ப வாக்கு எண்ணிக்கையை நிறைவு செய்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் கூறியது.
பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க தேவையான 47 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில் B.C. மாகாண தேர்தல் முடிவுகள் உள்ளன.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளை அடிப்படையில் NDP 46 தொகுதிகளிலும், Conservative 45 தொகுதிகளிலும், BC பசுமை கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
Juan de Fuca Malahat, Surrey City Centre தொகுதிகளில் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் முதல் இரண்டு வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் 100 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளனர்.
இதன் மூலம் மாகாண தேர்தல் சட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் கட்டாய மீள் வாக்கு  எண்ணிக்கை கட்டாயமாகிறது.
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 2,037,897 வாக்குகள் பதிவாகியுள்ளதாக B.C. தேர்தல்கள் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.
B.C.மாகாணசபைத் தேர்தலில் இதுவே அதிக வாக்கு பதிவாகும்.

Related posts

வர்ணனையாளர் Rex Murphy காலமானார்!

Lankathas Pathmanathan

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan

இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் Liberal வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment