தேசியம்
செய்திகள்

தெளிவான வெற்றியாளர் இல்லாமல் முடிவுக்கு வந்த BC தேர்தல்

பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க தேவையான 47 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில் British Colombia மாகாண தேர்தல் முடிவுகள் வெளியாகின.

British Colombiaவில் 43ஆவது மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை (19) நடைபெற்றது.

தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் இறுதி முடிவுகள் நிலுவையில் உள்ளன.
சனிக்கிழமை நள்ளிரவு எண்ணப்பட்ட வாக்குகளை அடிப்படையில் NDP 46 தொகுதிகளிலும், Conservative 45 தொகுதிகளிலும், BC பசுமை கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இந்த தேர்தல் முடிவுகளை British Colombia மாகாண தேர்தல் திணைக்களம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்தத் தேர்தல் முடிவுகள் வாக்காளர்களின் நிச்சயமற்ற தன்மையையும், விரக்தியையும் பிரதிபலிப்பதாக NDP தலைவர் David Eby கூறினார்.

ஏழு வருட ஆட்சியின் பின்னர் இந்த தேர்தலை NDP எதிர்கொண்டது.

இம்முறை BC United கட்சி தேர்தலில் இருந்து விலகி, Conservative கட்சிக்கு தனது ஆதரவை வழங்கியது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் 40 தொகுதிகளில் இம்முறை சுயேட்சை  வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் அநேகர் BC United வேட்பாளர்களாக இருந்தவர்கள் என கூறப்படுகிறது.
இவர்களில் ஆறு உயர்மட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

தேர்தல் அறிவிக்கப்படும் போது NDP 55, BC United 20, Conservative 8, BC பசுமைக் கட்சி 2, சுயேட்சை 2 என ஆசன பகிர்வுகள் இருந்தன.

இம்முறை புதிதாக 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் மொத்தம் 93 ஆசனங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றது.

Conservative கட்சி John Rustad தலைமையில்,  NDP David Eby தலைமையிலும், BC பசுமை கட்சி Sonia Furstenau  தலைமையிலும்  இந்தத் தேர்தலை எதிர்கொண்டது.

Conservative, NDP கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும், BC பசுமை கட்சி 69 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது.

47 ஆசனங்களை வெற்றி பெற்றால் பெரும்பான்மையை பெறலாம் என்ற நிலையில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.

இரண்டு கட்சித் தலைவர்கள் தமது தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெற்றனர்.

Conservative கட்சியின் தலைவர் John Rustad தனது Nechako Lakes தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.

இவர் இந்தத் தொகுதியை 2005 ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

61 வயதான John Rustad, உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் Conservative கட்சியின் தலைவரானார்.

B.C. Liberal கட்சியின் தலைமையில் இருந்து காலநிலை மாற்றம் குறித்த அவரது கருத்துக்களால் விலக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளில், அவர் Conservative கட்சியை தனது பழைய கட்சியை மூழ்கடிக்கும் புகழ் நிலைக்கு அழைத்துச் சென்றார்.

NDP கட்சியின் தலைவர் David Eby தனது Vancouver–Point Grey தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.

இவர் தொடர்ந்து நான்காவது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்
ஆனால் பசுமை கட்சி Sonia Furstenau தனது தொகுதியில் தோல்வி அடைந்தார்.

தனது Cowichan Valley தொகுதியை விட்டு விலகி Sonia Furstenau , முதல் தடவையாக Victoria–Beacon Hill  தொகுதியில் இம்முறை போட்டியிட்டார்.

NDP வேட்பாளர் Grace Lore இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

தேர்தல் நாளுக்கு முன்னதாக முன்கூட்டிய வாக்களிப்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இம்முறை வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் குறையும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்றுங்கள்: NDP

Gaya Raja

உக்ரைன் ஆக்கிரமிப்பு காரணமாக ஜனநாயகம் ஒரு புதிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment