கனடிய சீக்கிய தலைவர் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக வெளியான குற்றச் சாட்டுகளை கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் மறுக்கிறார்.
கனடிய சீக்கியத் தலைவர் Hardeep Singh Nijjar, கடந்த ஆண்டு British Colombia வில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என கனடாவிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மறுத்துள்ளார்.
இந்தக் கொலையில் தொடர்பு உள்ளதா என கனடிய செய்தி தொலைக்காட்சி ஒன்று கேள்வி எழுப்பிய போது சஞ்சய் குமார் வர்மா அதனை மறுத்தார்.
குறிப்பிட்ட நபரின் மரணத்தை இறுதிக் குறிக்கோளாகக் கொண்டு இந்திய அரசாங்கம் எப்போதாவது நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாக என்ற கேள்விக்கு “ஒருபோதும் இல்லை” என அவர் பதிலளித்தார்.
கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக RCMP அண்மையில் குற்றம் சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டின் எதிரொலியாக சஞ்சய் குமார் வர்மா உட்பட ஆறு தூதர்களை கனடா வெளியேற்றியது.
இந்த நபர்களை வெளியேற்றுவதற்கான முடிவு RCMP முன்வைத்த போதுமான தெளிவான, உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் மிகுந்த கவனத்துடன் எடுக்கப்பட்டது என கனடிய வெளியுறவு அமைச்சர் மெலனி Melanie Joly தெரிவித்திருந்தார்.
ஆனாலும் இந்த குற்றச்சாட்டை “அரசியல்” என மறுத்தார்.
கனடாவின் நகர்வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆறு கனடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
Hardeep Singh Nijjar ரின் கொலையில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு “நம்பகமான சான்றுகள் ” இருப்பதாக பிரதமர் Justin Trudeau ஒரு வருடத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த விசாரணையில் கனடிய அதிகாரிகளுடன் ஒத்துழைக்க இந்திய அதிகாரிகள் விசாரணைக்கு மறுத்து வருகின்றனர்.
அன்று முதல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் நிலவி வருகிறது.
ஆனாலும் எந்த ஆதாரமும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என சஞ்சய் குமார் வர்மா கூறினார்.