British Colombia மாகாணசபை தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகள் தலைவர்கள் வெற்றி பெற்றனர்.
43ஆவது மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை (19) நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றது என்ற விபரம் வெளியாகவில்லை.
தேர்தல் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படும் நிலையில் தேர்தல் முடிவுகளை British Colombia மாகாண தேர்தல் திணைக்களம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
Conservative கட்சி John Rustad தலைமையில், NDP David Eby தலைமையிலும், BC பசுமை கட்சி Sonia Furstenau தலைமையிலும் இந்தத் தேர்தலை எதிர்கொண்டது.
இந்தத் தேர்தலில் இரண்டு கட்சித் தலைவர்கள் தமது தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெற்றனர்.
Conservative கட்சியின் தலைவர் John Rustad தனது Nechako Lakes தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.
இவர் இந்தத் தொகுதியை 2005 ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
61 வயதான John Rustad, உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் Conservative கட்சியின் தலைவரானார்.
B.C. Liberal என அறியப்பட்ட கட்சியின் தலைமையில் இருந்து காலநிலை மாற்றம் குறித்த அவரது கருத்துக்கள் காரணமாக விலக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளில், அவர் Conservative கட்சியை தனது பழைய கட்சியை மூழ்கடிக்கும் புகழ் நிலைக்கு அழைத்துச் சென்றார்.
NDP கட்சியின் தலைவர் David Eby தனது Vancouver–Point Grey தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.
இவர் தொடர்ந்து நான்காவது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஆனால் பசுமை கட்சி Sonia Furstenau தனது தொகுதியில் தோல்வி அடைந்தார்.
தனது Cowichan Valley தொகுதியை விட்டு விலகி Sonia Furstenau , முதல் தடவையாக Victoria–Beacon Hill தொகுதியில் இம்முறை போட்டியிட்டார்.
NDP வேட்பாளர் Grace Lore இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.