Scurvy நோய் குறித்து அவதானமாக இருக்குமாறு கனடிய மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பு காரணமாக, கனடாவில் உள்ள மருத்துவர்கள் இந்த நிலைமையை கவனிக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.
திங்கட்கிழமை (07) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, கடந்த ஆண்டு Toronto மருத்துவமனையில் Scurvy நோய் கண்டறியப்பட்ட 65 வயதான பெண் குறித்த விவரங்களை வெளியிட்டது.
Vitamin C குறைபாட்டால் ஏற்படும் நிலை உணவுப் பாதுகாப்பின்மையுடன் தொடர்புடையது என கனடிய மருத்துவர் சங்க இதழில் (Canadian Medical Association Journal -CMAJ) வெளியான அறிக்கை கூறுகிறது.