தேசியம்
செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவை நினைவு கூறும் கனடிய தலைவர்கள்

கனடிய அரசியல் தலைவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் October 7 தாக்குதலின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வை முன்னெடுக்கின்றனர்.

இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான October 7 தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி கனடிய தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

தனது எண்ணங்கள் அனைத்து இஸ்ரேலியர்கள், யூத மக்களுடனும், கனடாவில் உள்ள யூத சமூகத்துடனும் இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

கனடாவில் பயங்கரவாத குழுவாக தடை செய்யப்பட்ட ஹமாஸை தனது அறிக்கையில் Justin Trudeau கண்டித்துள்ளார்.

October 7, தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்  பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பாதுகாப்பாக வாழ முடியும்” என கூறிய பிரதமர், இருநாட்டு தீர்வை நோக்கி செயல்படுவதில் Liberal அரசாங்கம் உறுதியாக உள்ளதாக கூறினார்.

கனடாவில் நிலவும் “கொடூரமான” யூத எதிர்ப்பு நிலையை Conservative கட்சி தலைவர் Pierre Poilievre கண்டித்தார்.

பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

கனடாவின் யூத சமூகத்துடன் புதிய ஜனநாயகக் கட்சியினர் துக்கம் அனுசரிப்பதாக NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.

பணயக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற அழைப்பையும் அவர் விடுத்தார்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பல போராட்டங்கள் திங்கட்கிழமை (07) கனடாவின் பல பகுதிகளில் நடைபெற்றது.

Related posts

Air Canada சேவை நிறுத்தத்தை தவிர்க்க ஒரு உடன்பாடு எட்டப்பட வேண்டும்: Justin Trudeau

Lankathas Pathmanathan

மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை

Lankathas Pathmanathan

கனேடியர்களாகும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment