தேசியம்
செய்திகள்

மூன்று கொலைகள் தொடர்பான குற்றச் சாட்டில் Toronto பெண் கைது

மூன்று கொலைகள் தொடர்பான குற்றச் சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் நிகழ்ந்த மூன்று கொலைகள் தொடர்பாக Toronto நகரை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூன்று நாட்களில் மூன்று பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் 30 வயதான Sabrina Kauldhar கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (01) Toronto நகரில் 60 வயதான பெண் ஒருவரையும், புதன்கிழமை (02) Niagara நகரில் 47 வயதான ஆண் ஒருவரையும், வியாழக்கிழமை (03) Hamilton நகரில் 77 வயதான ஆண் ஒருவரையும் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார்.

செவ்வாய் பிற்பகல் Torontoவில் Keele and Dundas பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 60 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது

இரண்டாவது கொலை Niagara Falls நகரில் உள்ள John Allan பூங்காவில் மறுதினம் நிகழ்ந்ததாக காவல்துறை கூறுகிறது.

காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்தபோது ஆபத்தான காயங்களுடன் ஆண் ஒருவரைக் கண்டுபிடித்தனர்.

47 வயதான Lance Cunningham என அடையாளம் காணப்பட்ட இவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இறுதி சம்பவம் Hamilton நகரில் வியாழன் மதியம் நிகழ்ந்தது.

வாகன நிறுத்துமிடத்தில் ஆண் ஒருவரை கத்திக்குத்து காயங்களுடன் காவல்துறையினர் கண்டனர்.

77 வயதான Mario Bilich என அடையாளம் காணப்பட்ட அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வீடியோ காட்சிகள் மூலம் Niagara காவல்துறையால் Sabrina Kauldhar அடையாளம் காணப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து Hamilton, Toronto  கொலைகளுடன் அவருக்கான தொடர்பு தெரியவந்துள்ளது.

பலியான முதலாவது நபரை Sabrina Kauldhar ஏற்கனவே அறிந்திருந்தார் எனவும், ஏனைய இருவரும் அவருக்கு முன்னர் தெரிந்தவர்கள் அல்ல எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த கொலைகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை .

இவர் வேறு கொலைகளுடனும் தொடர்பு பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவருக்கு எதிரான குற்றசாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Alberta மாகாணம் கனடா ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து வெளியேறுவது மாற்ற முடியாத தவறு?

Lankathas Pathmanathan

Leave a Comment