Old Montreal பகுதியில் உள்ள வரலாற்று கட்டிடத்தில் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை Old Montreal பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமையான கட்டிடத்தில் தீப்பிடித்ததில் குறைந்தது இரண்டு பேர் இறந்தனர்- பலர் காயமடைந்தனர்.
மூன்று மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் இந்த தீ ஆரம்பமானது
ஆனாலும் இந்த தீக்கு காரணம் தெரியவில்லை என கூறும் Montreal காவல்துறையினர், இது “சந்தேகத்திற்குரியது” என தெரிவித்தது
தீ விபத்து ஏற்பட்ட போது இறந்தவர்களின் எண்ணிக்கை அல்லது கட்டிடத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தீ விபத்தில் குறைந்தது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்
அங்கிருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கம் அழைக்கப்பட்டது.