விரைவில் தேர்தல் ஒன்றை கட்டாயப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த எச்சரிக்கையை Bloc Quebecois தலைவர் விடுத்துள்ளார்.
Bloc Quebecois கட்சியின் முதியோர் பாதுகாப்பு பிரேரணைக்கு எதிராக Liberal கட்சி வாக்களித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
October 29 ஆம் திகதிக்குள் இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு “அரச பரிந்துரை” வழங்கத் தவறினால் தேர்தலை சந்திக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என Bloc Québécois தலைவர் Yves-François Blanchet கூறினார்.
Bloc Québécois கட்சியின் ஓய்வூதிய திட்ட பிரேரணைக்கு எதிராக பெரும்பால Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (02) வாக்களித்தனர்.
இந்த நிலையில் Yves-François Blanchet தேர்தல் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் .
65 முதல் 74 வயதுக்குட்பட்ட முதியவர்களுக்கு முதியோர் பாதுகாப்பு (OAS) கொடுப்பனவுகளை 10 சதவிகிதம் அதிகரிக்கும் Bloc Québécois கட்சியின் தனிநபர் பிரேரணையான Bill C-319ஐ ஆதரிக்குமாறு Yves-François Blanchet செவ்வாய்க்கிழமை (01) அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
புதன்கிழமை வாக்களிப்புக்கு விடப்பட்ட இந்த பிரேரணை 181 க்கு 143 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
Conservative, NDP, பசுமை கட்சி, ஐந்து Liberal பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த பிரேரணை வெற்றியடைந்தது.
பெரும்பாலான Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
Bloc Québécois கட்சியின் இந்த ஓய்வூதிய பிரேரணை ஒரு சட்டமாக மாறுவதற்கு Liberal அரசாங்கத்தின் “அரச பரிந்துரை” அவசியமாகிறது.
இந்த நிலையில் இம்மாத இறுதிக்குள் இந்த ஓய்வூதிய சட்டத்தை நிறைவேற்றாவிட்டால், முன்கூட்டியே தேர்தலை தூண்டுவதற்கு ஏனைய எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக Yves-François Blanchet அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.