கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2023 இல் வியத்தகு அளவில் அதிகரித்தது.
அரசாங்க புள்ளிவிவரங்கள் இந்தத் தரவுகளைச் சுட்டிக் காட்டுகின்றன.
இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என் எதிர்வு கூறப்படுகிறது.
இந்த அதிகரிப்பை “ஆபத்தான போக்கு” என் குடிவரவு அமைச்சர் Marc Miller கூறினார்.
2023 ஆம் ஆண்டில், கல்வி அனுமதியுடன் மொத்தம் 13,075 மாணவர்கள் புகலிடம் கோரியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2022இல் பதிவான 5,290ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
2018 இல், அந்த எண்ணிக்கை 2,230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.