December 12, 2024
தேசியம்
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு வாரத்தில் இரண்டாவது தடவை தோல்வி?

ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியைடையும் நிலை தோன்றியுள்ளது.

பிரதமர் Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி வியாழக்கிழமை (26) சபையில் முன்வைத்தது.

ஏற்கனவே புதன்கிழமை (25) வாக்களிப்புக்கு விடப்பட்ட முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த நிலையில், இந்த புதிய நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி சமர்ப்பித்தது.

இந்த புதிய தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (01) நடைபெறவுள்ளது.

முதலாவதை போல் இந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வி அடையும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Bloc Quebecois, NDP கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.

இதன் மூலம் Justin Trudeau அரசாங்கத்தின் ஆட்சி காலம் நீடிக்கும் நிலை உள்ளது.

NDPயின் ஆதரவு இல்லாத நிலையில், Liberal கட்சி இந்த இலையுதிர் காலத்தில் தொடர்ச்சியான நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொள்ளும் நிலை உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் நாடுகளை உள்ளடக்கிய பயணத் தடை அமுலில்!

Lankathas Pathmanathan

சிரியாவில் உள்ள கனடிய தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்?

Lankathas Pathmanathan

பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு விரிவடையும் கனேடிய கழிவு நீர் கண்காணிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment