தேசியம்
செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் இரண்டு கனடியர்கள் பலி – மூவர் காயம்

லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் அண்மைய வான் வழித் தாக்குதல்களில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை முன்னெடுக்கிறது.

இதில் அண்மையில் நிகழ்ந்த தாக்குதலில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.

இந்த தகவலை கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly உறுதிப்படுத்தினார்.

கொள்ளப்பட கனடியர்கள் கணவன், மனைவி என் குடும்பத்தினர் மூலம் தெரியவந்தது.

அவர்கள் Hussein Tabaja, Daad Tabaja என அடையும் காணப்பட்டனர்.

தெற்கு லெபனானில் வசித்து வந்த இவர்கள் கனடிய குடிமக்கள் என் தெரியவருகிறது.

இவர்கள் 1990ஆம் ஆண்டுகளின்   ஆரம்பத்தில் கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

லெபனானில் உள்ள கனடியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பல மாதங்களாக கனடிய அரசு வலியுறுத்தி வருகிறது.

அமைச்சர் Mélanie Joly இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

லெபனானில் உள்ள கனடியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கனடிய அரசுக்கு புதன்கிழமை (25) NDP அழைப்பு விடுத்தது.

Related posts

2023இல் கனடிய வீட்டு விலைகள் சராசரியாக 3.3 சதவீதம் குறையும்

Lankathas Pathmanathan

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

கட்டுப்பாடுகளை தளர்த்தும் Quebec – தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை நீட்டிக்கும் British Colombia

Lankathas Pathmanathan

Leave a Comment